சிறுவாபுரி முருகன் அற்புதங்கள்
சிறுவாபுரி என்றாலே அண்டர்பதி குடியேற எனும் திருப்புகழ் முருகன் அடியார்களுக்கு நினைவுக்கு வரும். வீடு கட்டி குடியேற ஏற்படும் தடைகளை அகற்றி ஒருவர் சொந்த வீட்டில் குடியேற இந்ந திருப்புகழும் இந்த திருப்புகழ் பாடப் பெற்ற தலமான சிறுவாபுரியும் உதவுவதாக கூறுகிறார்கள். எனக்கு தெரிந்த ஒரு பெண்மணி குழந்தை வரம் வேண்டி இந்ந சிறுவாபுரி முருகனை காண தொடர்ந்து 6 வாரங்கள் சென்று உள்ளார். ஆனால் அதன் இடையில் அவர்கள் எதிர்பாரத விதமாக அவர்களுக்கு சொந்தமாக இடம் வாங்கும் வாய்ப்பு அமைந்து இடம் வாங்கி உள்ளனர். அப்படி அற்புதங்கள் நிறைந்த அற்புதமான ஸ்தலம் சிறுவாபுரி. சென்னையில் இருந்து 40 கீமீ தொலைவுக்குள் கொல்கத்தா செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இங்கே முருகப்பெருமானை ஸ்ரீ பாலசுப்ரமணியர் என்று அழைக்கின்றனர். இந்த கோயிலில் ஸ்ரீ அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனும் உள்ளனர். மேலும் சிறுவாபுரியில் முருகப்பெருமானைத் தவிர சூரியனார், சண்டிகேஸ்வரர், நாகர், ஆதிமூலர், நவக்கிரகங்கள், கால பைரவர், அருணகிரிநாதர், மயூரநாதர் ஆகியோருக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன. சிறுவாபுரியில் இந்த கோவிலில் மூலவர் பாலசுப்ரம...