Posts

Showing posts from March, 2023

அருள் மழை பொழியும் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி

அருள் மழை பொழியும் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி திருச்சி மாவட்டத்தில் உள்ள சிவ ஆலயங்களில் திருவானைக்காவல் #ஜம்புகேஸ்வரர் ஆலயம் புகழ் பெற்ற தலம்.யானை பூஜித்ததால் இது #யானைக்காவல்; அம்பிகை ஈசனிடம் உபதேசம் பெற்ற தலமாதலால் #உபதேசத் தலம்; ஜம்பு மாதவ முனிவர் வழிபட்டதால் *ஜம்புவனம், *ஜம்புகேஸ்வரம், *ஜம்புவீச்வரம் என்றெல்லாமும் இத்தலம் அழைக்கப்படுகிறது. 🌀பஞ்சபூத தலங்களில் இத்தலம் நீருக்கு உரிய தலம். 51 சக்தி பீடங்களில் தண்டநாதபீடம் எனும் #வாராஹி பீடமாக இந்த சந்நதி விளங்குகிறது. 🌀காஞ்சிப் பெரியவர் #அகிலாண்டேஸ்வரிக்கு ஆதிசங்கர பகவத்பாதாள் உருவாக்கி பிரதிஷ்டை செய்த #சிவசக்ரம்,#ஸ்ரீசக்ரம் போன்ற இரண்டு தாடங்கங்களையும் புதுப்பித்து அம்பிகைக்கு அணிவித்து மகிழ்ந்தார். 🌀சிவன் கட்டளைக்காக அம்பிகை,பூலோகத்தில் மானிடப் பெண்ணாக பிறந்தாள்.இங்கு காவிரி நீரில் லிங்கம் பிடித்து வழிபட்டாள்.சிவன் அந்த லிங்கத்தில் எழுந்தருளி அவளுக்குக் காட்சி தந்தார்.அம்பிகையால் நீரில் லிங்கம் உருவாக்கப்பட்ட தலம் என்பதால் இது, பஞ்ச பூத தலங்களில் நீர் தலமானது. 🌀பிற்காலத்தில் ஜம்பு என்னும் முனிவர் சிவனை வேண்டி இங்கு தவமிருந்தார...

சோளிங்கர் யோக நரசிம்மர்

சோளிங்கர் யோக நரசிம்மர்- ராம அவதாரம் முடிந்ததும் ராமபிரான் வைகுண்டம் எழுந்தருளும் வேளையில், தாமும் உடன் வருவதாக கூறினார் ஆஞ்சநேயர். ஆனால் ராமபிரான், ‘கடிகாசலத்தில் என்னைக் குறித்து தவம் செய்யும் சப்த ரிஷிகளுக்கும், காலன் மற்றும் கேயன் எனும் இரு அரக்கர்கள் தொல்லை கொடுக்கிறார்கள். அவர்களை என்னுடைய சங்கு, சக்கரத்தால் அழித்து கலியுகம் முடியும் வரை நீயும் கடிகாசலத்தில் சங்கு, சக்கரத்துடன் இருந்து யோக ஆஞ்சநேயராக மக்களுக்கு அருள்பாலித்து கலியுகம் முடியும் வேளையில் எம்மை வந்தடைவாய்’ என்று கூறிவிட்டார். இதனால்தான் யோக நிலையில் சங்கு, சக்கரத்துடன் அமர்ந்த நிலையில் ஆஞ்சநேயருக்கு தனி சன்னிதி கோவிலில் இருக்கிறது.கலியுகம் முடியும் வரை அனுமனும் கலியுகத்திலேயே வாழ்வதாக ஐதீகம். எனவேதான் இன்றும் பக்தியோடு, ராமாயணம் படிக்கும் இடம் தோறும் ஆஞ்சநேயர் அருவமாகவோ, உருவமாகவோ வந்து கலந்துகொள்வதாக ஐதீகம் . பக்த பிரகலாதனுக்காக தூணில் இருந்து அவதரித்தவர் நரசிம்மர்அத்திரி, காஷ்யபர், வசிஷ்டர், ஜமதக்னி, கவுதமர், பரத்வாஜா, விஸ்வாமித்ரர் என சப்த ரிஷிகளின் வேண்டுகோளுக்கு இணங்கி நரசிம்மப் பெருமாள் சோளிங்கபுரம் தலத்தில் சா...

பஞ்ச வைத்தியநாதர் தலங்கள்

பஞ்ச வைத்தியநாதர் தலங்கள் ஸ்ரீ ருத்ரம் பத்தாவது அனுவாகத்தில் வரும் ஒரு ஸ்லோகம் பின்வருமாறு கூறுகிறது. யா தேருத்ர ஷிவா தநூः சிவ விஷ்வாஹ பேஷஜி । சிவ ருத்ரஸ்ய பேஷஜி தயா நோமிருட் ஜீவஸே॥ யா தே ருத்ர ஷிவா தனு ஷிவா விஷ்வாஹ பேஷஜி | ஷிவா ருத்ரஸ்ய பேஷஜி தயா நோ ம்ருதா ஜீவஸே|| இது இவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது: “ஓ ருத்ரா பகவானே! அந்த வடிவத்தால், உன்னுடையது அமைதியும், மங்களமும், எல்லா நாட்களும் மனித நோய்களுக்குப் பரிகாரமாக இருப்பதால், அதிக மங்களகரமானது என்றால், ஞானம் மற்றும் ஒளியின் அருளால், அது அறியாமையையும், சம்சாரத்தின் முழுத் துன்பத்தையும் முற்றிலுமாக அகற்றும். உமது கருணை வடிவமே, எங்களை நிறைவான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழச் செய்வாயாக.” இதன் எளிய பொருள், சிவனை ருத்ரனாகவும், அமைதியானதாகவும், மங்களகரமானதாகவும், மனித நோய்களுக்கான பரிகாரமாகவும் குறிப்பிடுவது. வைத்தியநாதர் அல்லது வைத்தீஸ்வரன் என்றால் நோய்களைக் குணப்படுத்துபவர் என்று பொருள்படும், இந்த ஆலயம் உண்மையில் நோய்களில் இருந்து விடுபட விரும்பும் மக்களால் வழிபடப்படுகிறது. ஆழமான, ஆன்மிகப் பொருள் என்னவெனில், நோயானது பூமியில் உள்ள வாழ்க்...

சொக்கநாதர் இரவில் தங்க மாட்டார்

. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பிறந்தவுடன் வசந்த ருது தொடங்கிவிடும். சித்திரையும் வைகாசியும் வசந்த ருதுவிற்கான மாதங்களாகும். ஆனால் பங்குனி மாதத்தின் பிற்பாதியிலேயே வசந்தத்தின் அறிகுறிகள் தோன்றிவிடும். இலைகளை உதிர்த்த மரங்கள் அனைத்தும் துளிர் விட்டுப் பூக்க ஆரம்பிக்கும். பங்குனி, சித்திரை மாதங்களில் அநேகமாக அனைத்து ஆலயங்களிலும் பிரம்மோற்சவம் நடைபெறும். குறிப்பாக பங்குனி உத்திர நாளன்று சிவாலயங்களிலும், வைணவ ஆலயங்களிலும் திருக்கல்யாண உற்சவங்களை நடத்துவர். முருகப் பெருமான் ஆலயங்களிலும் பங்குனி உத்திரத் திருவிழா மிகச் சிறப்பாகும். ஒருகாலத்தில் மதுரை மீனாட்சி அம்மன்- சொக்கநாதர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்திருவிழா, கோடை வசந்தத் திருவிழாவாக பத்து நாட்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. இந்த நன்னாளில் மீனாட்சியம்மன் - சுந்தரேஸ்வரர் இருவரும் மதுரைக்கு அருகில் சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருப்பூவனம் சிவாலயத்திற்கு காலையில் திரு உலாச்சென்று இரவிற்குள் திரும்பி வருவது வழக்கம். திருப்பூவனம் பாண்டி நாட்டுப் பாடல் பெற்ற 14 தலங்களில் ஒன்றாகும். மூவர் பாடல் பெற்ற தலமான இத்தலத்தில் ...

திருநின்றவூர் இருதயாலீஸ்வரர்

திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் கோவில் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டத்தில் உள்ள திருநின்றவூர் எனும் ஊரில் அமைந்துள்ள சிவாயலமாகும்.இத்தலத்தின் மூலவர் இருதயாலீஸ்வரர், தாயார் மரகதாம்பிகை. சுவாமி கிழக்கு நோக்கி உள்ளார். அம்மன் தெற்கு நோக்கி உள்ளார். இருவருக்கும் தனிதனி சன்னதிகள் உள்ளது. சுவாமியின் விமானம் கஜபிஷ்டம் அமைப்பில் தூங்கானை மாடவடிவில் அமைந்துள்ளது. சுற்றுப் பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி, நடராஜர், நந்தி தேவர், சண்டிகேசவர் சன்னதிகள் உள்ளன. திருநின்றவூர் , சென்னை ஒரு சமயம் ஒரு பக்தி உள்ளத்தின் பக்தியின் வெளிப்பாட்டையும், தீவிர பக்தியின் விளைவாகப் பிரதிபலித்த அருளையும் கண்டது. பூசலார், பொருள் செல்வத்தின் அடிப்படையில் ஏழை, ஆனால் சிவபெருமானிடம் அர்ப்பணிப்புள்ள பக்தியில் பணக்காரர் . அவரது இதயம் இறைவனின் மீது அன்பும் பக்தியும் நிறைந்தது. அவரது உடலில் எப்போதும் புனித சாம்பல் பூசப்பட்டதால், அவர் பூசலார் என்று அழைக்கப்பட்டார். ஆன்மிகப் பாதையில் சரியான விதமான ஆசை, இறுதியில் தெய்வீகத்துடன் ஒன்றிவிட விரும்புபவரை நிலைநிறுத்தும் என்று பகவான் ரமணா கூறு...

அருள்மிகு தோரணமலை முருகன் திருக்கோயில்

அருள்மிகு தோரணமலை முருகன் திருக்கோயில் அமைவிடம்  உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் தென்காசி மாவட்டம் கடையம் அருகே தோரணமலை உள்ளது. இந்த மலையின் உச்சியில் இருக்கும் குகைக் கோயிலில் முருகப்பெருமான் கிழக்குநோக்கி வீற்றிருக்கிறார். இறையருள் வீசும் இந்த மலைப்பகுதி ஒரு காலத்தில் பட்டங்கள் வழங்கும் பாடசாலையாக விளங்கியது. எப்படி செல்வது தென்காசியிலிருந்து கடையம் செல்லும் வழியில், கடையத்திற்கு சற்றுமுன் மேற்குநோக்கி ஒருவழிப்பாதை வழியாகச் சென்றால் தோரணமலையை அடையலாம். கோயில் சிறப்பு : இந்த குகை இயற்கையில் கிழக்கு நோக்கி அமைந்திருப்பது தனிச்சிறப்பு. இந்த முருகன் திருச்செந்தூர் முருகனை நோக்கிய வண்ணம் இருப்பதால் இவரை வழிபட்டால் திருச்செந்தூர் முருகனை வணங்கிய புண்ணியம் கிடைக்கும். முருகப்பெருமானின் இடதுபுறத்தில் சற்று உயரமான இடத்தில் இருக்கும் சுனை புனித நீராக கருதப்படுகிறது. இந்த சுனையில் இருந்து தான் முருகப்பெருமானுக்கு அபிஷேகத்துக்கு தண்ணீர் எடுத்துவரப்படும். மலை உச்சியில் பெரும் பாறைக்கு இடையில் இப்படி ஊற்று பொங்கி வருவது ஆச்சரியத்திலும் ஆச்சர்யம். மலை மீது ஏறி இதி...