திருச்சிராப்பள்ளி திருப்புகழ்
🌺திருப்புகழ் 548 அந்தோ மனமே (திருசிராப்பள்ளி) 🌺(மனதுக்கு உபதேசமாக அமைந்த மிக அரிய பாடல் இது. 'மனமே, உடலை நம்பாதே. இது இன்ப-துன்பத்திக்கு இடமாகிய ஒரு இயந்திரம். பிரம்மன் ஏதோ ஆய்ந்து பூட்டிய பூட்டு இது. [ எப்போது அவிழுமோ தெரியாது.] ஆனால் நாம் பயப்படாமல் என்ன செய்யவேண்டுமென்றால் , இந்த உடலை வீணே கழிக்காமல், க்ரவுஞ்ச மலையைத் தூளாக்கிய வேலவருக்கு அடிமை செய்து, அவர் தந்த சீட்டையும், விபூதிப் பொட்டலத்தையும் நல்ல அறிகுறியாக ஏற்று, சதாகாலமும் "மைந்தா குமரா " என ஓதவேண்டும்' என்கிறார் அருணகிரியார். சிராப்பள்ளி் என்பார் மனமேதினி நோக்கிய பெருமாளே," என்கிறார் . அதாவது, திருச்சிராப்பள்ளி, திருச்சிராப்பள்ளி, என்று திரும்பத் திரும்பச் சொல்வோரின் உள்ளத்தையே தன் கோயிலாகக் கொண்டு விடுகிறானாம் முருகன்! எத்துணை தலப் பெருமை!"திருச்சிராப்பள்ளி என்னலும் தீவினை நரிச்சிராது நடக்கும் நடக்குமே" என்கிறார் அப்பர் பெருமானும். அதாவது, சிராப்பள்ளி என்று சொன்னதும் தீவினை ஓடி விடுமாம். அத்தகைய சீரும் பேரும் பெற்ற திருத்தலப் பாடலில், அலை பாயும் மனதை நிலைப்படுத்த வழிகள் சொல்கிறார் அருணகிர...