விநாயகர் அகவல் (ஔவையார்)
சீதக் களபச் செந்தா மரைபூம் பாதச் சிலம்பு பலஇசை பாடப் பொன் அரை ஞாணும் பூந்துகி லாடையும் வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் இரண்டு செவியும் இலங்கு பொன் முடியும் திரண்டமுப்புரி நூல் திகழொளி மார்பும் சொற்பதங் கடந்த துரியமெய் ஞான அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே முப்பழம் நுகரும் மூஷிக வாகன இப்பொழு தென்னை யாட்கொள வேண்டித் தாயாய் எனக்குத் தானெழுந் தருளி மாயாப் பிறவி மயக்க மறுத்தே திருந்திய முதலைந் தெழுத்துந் தெளிவாய் பொருந்தவே வந்தேன் உளந்தனிற் புகுந்து குருவடி வாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திறமிது பொருளென வாடா வகைதான் மகிழ்தெனக் கருளிக் கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில் தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி ஐம்புலன் றன்னை அடக்கு முபாயம் இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் கருவிக ளொடுக்குங் கருத்தினை யறிவித்து இருவினை தன்னை அறுத் திருள் கடிந்து தலமொரு நான்குந் தந்தெனக்கருளி மலமொரு...