Posts

Showing posts from April, 2021

இடரினும் தளரினும் - செல்வம் பெருக தொழில் சிறக்க படிக்க வேண்டிய பதிகம்

 திருச்சிற்றம்பலம்  இந்த பதிகமானது திருஞானசம்பந்தர் அவர்களால் திருவாடுதுறை தலத்தில் இருக்கும் இறைவனை வேண்டி பாடப்பெற்ற பதிகம். இதில் திருஞானசம்பந்தர் தன் தந்தையின் வேள்விக்கு பொருள் வேண்டி பாடிய பதிகம். உலக நன்மைக்காய் செய்யும் வேள்விக்கு இறைவனிடம் பொருள் வேண்டி பாடிய பதிகம். தொழில் சிறக்க வருமானம் பெருக படித்து வரலாம் .    இடரினுந் தளரினும் எனதுறுநோய்   தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்   கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை   மிடறினில் அடக்கிய வேதியனே   இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்   அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே….1    வாழினுஞ் சாவினும் வருந்தினும்போய்  வீழினும் உனகழல் விடுவேனல்லேன்  தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்  போழிள மதிவைத்த புண்ணியனே  இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்  அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே….2   நனவினுங் கனவினும் நம்பாவுன்னை  மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்  புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த  கனலெரி யனல்புல்கு கையவனே  இதுவோஎமை ...