ஆடித்தபசு விழா
#வரராசைபுரம்....இந்த ஊர் தமிழகத்தின் தென்பகுதியில் இருக்கிறது. இப்படி ஒரு ஊரா... கேள்விப்பட்ட மாதிரியே இல்லை என்பவர்கள், இந்தப் பட்டியலைப் படித்தால், உடனே இந்த ஊருக்குப் புறப்பட்டு விடுவீர்கள். இங்கு ஒருநாள் தங்கினால் முற்பிறவியில் செய்த பாவமும், இரண்டு நாள் தங்கினால் இப்பிறப்பில் செய்த பாவமும், மூன்று நாள் தங்கினால் மறுபிறவியில் பாவமே செய்ய இயலாமனநிலையும் ஏற்படும். ஞாயிறன்று இங்கு சூரியனை மனதில் நினைத்து விரதமிருப்பவர் கண் வியாதியின்றி இருப்பர். திங்களன்று சந்திரனை நினைத்து விரதமிருப்பவர் வாழ்வுக்குப் பின் சிவலோகம் அடைவர். செவ்வாயன்று விரமிருப்பவர் நோய் மற்றும் சனிதோஷத்தில் இருந்து நிவர்த்தி பெறுவர். புதனன்று விரதமிருப்பவர்கள் கல்வியில் சிறப்பாகத் திகழ்வர். வியாழன்று விரதமிருந்தால், ஆசிரியர் பதவி பெறலாம். (டி.இ.டி. தேர்வு எழுதுவோர் சென்று வரலாம்) வெள்ளியன்று விரதமிருப்போர் இந்திரனைப் போல் செல்வவளத்துடன் வாழ்வர். சனிக்கிழமை விரதமிருப்பவர் பொறாமை முதலிய துர்க்குணங்கள் நீங்கப்பெறுவர். ஒரு வருடம் பழமும், ஒரு வருடம் சருகும், ஒரு வருடம் தண்ணீரும், ஒரு வருடம் அதுவும் கூட இல்லாமல் விரதமிருந்த...